ஒரு மழை நாள்..
ஒரே ஒரு குடை என்னிடம்..
உன்னை இன்று நனைத்தேதீரவேண்டுமென
கங்கணம் கட்டிக்கொண்டு பெய்கிறது மழை..
மழையில் நனைய ஆசையிருந்தும்
ஒரே குடைக்குள் உன் அருகில் வர
அடம்பிடிக்கிறது மனது..
உன்னையும் என்னையும்
காதல்.. மழையாகி
ஒரேகுடையின்கீழ் ஆட்சிசெய்கிறது..
இதுவரை நான் பார்த்த மொத்த பெண்களையும்
ஒற்றைப்பெண்ணாக என் அருகில் காண்கிறேன்..
முதல் முறையாக குடைக்குள் நனைகிறேன்..
இன்னும் பத்துநொடிக்குள் உன்வீடு..
பதறுது நெஞ்சு..
நனையாமல் தாழ்வாரத்துக்குள்
உன்னைவிட்டபோது இடியாய்க்கொக்கரிக்கிறது
மனது - மழைஇடம்
மின்னலாய் உன் சிரிப்பு விடை சொல்ல..
வருகிறேன் என்று குடையுடன்
தெருவுக்கு வந்தேன்..
ரெண்டுவீடு
தாண்டியவுடன் அடக்கமுடியவில்லை
ஆனந்தத்தை..
குடயைத்தூக்கிஎறிந்துவிட்டு..
உன் தெருவில் நான் ஆடினேன் ஒரு
ஆனந்த தாண்டவம்..


No comments:
Post a Comment