Sunday, August 11, 2024

யாதுமாகி

 நீ என்னை அழ வைக்கப்பிறந்தவள்..

நான் உன்னை சிரிக்க வைக்கப்பிறந்தவன்

இது தெரியமால்தானே இத்தனை நாள் என்னை

அழ வைத்த்தாய் என்றதுமே

கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது உனக்கு

நானும் லேசாக அழுது - இன்னும் 

என்னை அழ வைப்பதை நீ நிறுத்தவில்லையா..!?

என்றதுமே

நமக்கான சிரிப்பும் அழுகையும்

ஒருமித்து ஒட்டிக்கொண்டது

நம்மில் காதலாக..