Friday, December 5, 2025

நீ

எப்போதும்.. நீ  எனக்கு..

என் மனதை நனைத்துப்போகிற 

"மழை"

Neee

உன்மேல் நான் கொண்ட காதலால்..

இந்த பிரபஞ்சத்தில் நிகழ்ந்த 

மாற்றங்கள் என்னவெனில்..


பல காகிதங்கள்.. கவிதைகளாகிப்போயின 

அவ்வளவே...

Nee

நீண்ட வருடங்கள் கழித்து 
எதேச்சையாக டீ கடையில் சந்தித்த முன்னாள் காதலி..

எப்போதுமில்லாத அதிர்ஷ்டம் 
இன்றுமட்டும்.. 
அவளும் தனியாக வந்திருந்தாள் 
நானும் தனியாகவந்திருந்தேன்..

நல விசாரிப்பினூடே.. குழந்தைகள் கணவர் மனைவி பெற்றோர் உடன்பிறந்தோர் பரஸ்பர விசாரிப்பை தாண்டி.. அவள் கேட்டாள்..

இப்பல்லாம் எப்பயாவது எனப்பத்தி ஞாபகம் வருமா.. நான் சிரித்துகொண்டே நாம படிக்கும்போது வரும் அளவுக்கு இப்போ வருவதில்லை.. 

எப்பயாவது சந்தோஷமா இருக்கும்போது.. சிலசமயம் கஷ்டமா இருக்கும்போது..
தனியாருக்கும்போது.. அமைதியாக இருக்கும்போது - இன்னும் சிலநேரம் தூங்கும்போதும் 

என் அனுமதியில்லாமலே உன் ஞாபகம் வரும்.. 

முன்னமாதிரி எப்போதும் உன்னை நினைக்க நேரமில்லை..

வருகிறேன் எனக்கொரு வேலையிருக்கிறது என்று கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டே கிளம்பிவிட்டேன்..