Sunday, September 27, 2009

நீராடும் நீர்..

நீ..குளித்து..
ஏனடி..நீராட்டுகிறாய்..
"நீரை.."

இசையாவோம்..

நீ..வீணை..
நான்..விரல்..
இரண்டும் சேர்ந்து
தேய்கையில்-பிறக்கட்டும்
"கீதம்.."

யுகங்கள்..

யுகங்கள் நான்காம்..

(ஒவ்வொரு முறையும்
நான்காவது யுகத்தின் முடிவில்
உலகம் அழிந்து மறுபடியும்
தோன்றுமாம்..!!!)

எனக்கு ரெண்டே.. ரெண்டுதான்..
உனைப்பார்க்காத...
"சனிக்கிழமையும்..ஞாயிற்றுக்கிழமையும்.."

இரவின் கவிதை

இருட்டிலும்..
கவிதை படித்தேன்..
கனவில்
"அவளின் கால் கொலுசோசை.."

Saturday, September 26, 2009

பூ..

எனக்கெனப்பிறந்த.. நீ..
உனக்கெனப்பிறந்த.. நான்..
எனைப்பிரிந்து நீயும்..
உனைப்பிரிந்து நானும்..
திருமணமாகி..

என்றோ ஒருநாள்..

உனைப்பார்க்கும்போது..
என் கண்களிலும்..
எனைப்பார்க்கும்போது..
உன் கண்களிலும்..
அரும்புகிற கண்ணீர்த்துளிகளில்..
இன்னும்.. மிச்சமிருக்கிறது
"காதல் "

ஹைக்கூ..

சிந்தியது.. நீ..
சிதறியது.. நான்..
"சிரிப்பு"

Friday, September 18, 2009

கவிதாயினி...

மலராய்த்தான்... இருந்தாள்
மணமாக இருந்ததால் விட்டுவிட்டேன்....
பிறகு..
தென்றலாய்...வந்தாள்
சுகமாக இருந்ததால்..கண்டுகொள்ளவில்லை...
திடீரென....
வெயிலாகக்.. கொளுத்தினாள்..
வாடவில்லை...
எரியும் தீயாய்ச்... சுட்டாள்
கருகவில்லை..
அலையாய்... மோதினாள்...
கலங்கவில்லை....
அன்பாய்... ஒருவார்த்தை பேசிட..
கல்லாய் இருந்தும் கரைந்தேன்...

(நான் எழுதிக்கொண்டிருந்ததை முதன்முதலாக "கவிதை" என்று என்னை உணரச்செய்த எழுத்து இது...)

Saturday, September 12, 2009

kavithaigal

நீ.. நான்..நிலா..காதல்..