Friday, September 18, 2009

கவிதாயினி...

மலராய்த்தான்... இருந்தாள்
மணமாக இருந்ததால் விட்டுவிட்டேன்....
பிறகு..
தென்றலாய்...வந்தாள்
சுகமாக இருந்ததால்..கண்டுகொள்ளவில்லை...
திடீரென....
வெயிலாகக்.. கொளுத்தினாள்..
வாடவில்லை...
எரியும் தீயாய்ச்... சுட்டாள்
கருகவில்லை..
அலையாய்... மோதினாள்...
கலங்கவில்லை....
அன்பாய்... ஒருவார்த்தை பேசிட..
கல்லாய் இருந்தும் கரைந்தேன்...

(நான் எழுதிக்கொண்டிருந்ததை முதன்முதலாக "கவிதை" என்று என்னை உணரச்செய்த எழுத்து இது...)

No comments:

Post a Comment